Saturday, November 8, 2025

Beware of Visa and Migration Frauds

 ⚠️🚩 Beware of Visa and Migration Frauds 🚷

In recent times, there has been a sharp rise in visa and migration scams across Kerala and the Gulf. Many agencies promise easy jobs or study opportunities abroad — but instead, cheat innocent people out of their hard-earned money.

Please be careful. Always verify an agency’s registration, background, and credibility before making any payment or submitting personal documents.

Below is a list of agencies that have received multiple public complaints related to visa fraud and cheating.

🚫 Reported Fraudulent or Suspicious Agencies

  1. Affiniks International, Kochi
  2. Adam Global Consultancy
  3. Adam’s Eden Overseas, Kochi
  4. Ajinoraha
  5. Apply for Future
  6. Irish Expert, Thrissur
  7. Asha Kiran
  8. Be. Skilled in Immigration
  9. Columbus, Thodupuzha
  10. Dreamlink Recruitment Ltd & Softlink Consultants
  11. Dr. Asif Ali
  12. Edu Futuristic Learning Pvt. Ltd
  13. Edway International, Kannur
  14. Exodus
  15. Florenzo, Ernakulam
  16. Global Migration Expert
  17. Global Plus Day
  18. Green Service, Kaloor
  19. Gulf Migration, Dubai
  20. Heralds International
  21. HR Business Solution (Sidharth & Nithin Sha)
  22. Immiworld Global Immigration, Dubai
  23. InspiringUK (Anoop Shashi)
  24. IMTP Kochi
  25. Johns Global, Cherthala
  26. LRG Cochin
  27. MJOB, Thrissur
  28. Migration, Calicut
  29. MostLands Travel Ventures Pvt. Ltd
  30. Morning Star, Kacheripadi, Ernakulam
  31. NBL Consultancy
  32. Pacafic, Mannarkkad
  33. Pentacare (Gulf – not UK)
  34. Proficient, Dubai
  35. UK in Regal Academy, Mangalore
  36. Ruppels Group, Ernakulam
  37. Sachi Staff Solution
  38. Sanctity International, Kozhikode
  39. Space International, Kochi
  40. Starnet, Kottayam & Kannur
  41. Starnet Study Abroad
  42. Stepping Stone, Kacheripadi, Ernakulam (Saju)
  43. St. Raphel Academy, Kottayam
  44. Sure Grow
  45. UKXpress Solutions Pvt. Ltd, Padivattom, Kakkanad
  46. Vega International, Dubai
  47. Viva Cristo, Kottayam
  48. We Route, Ernakulam
  49. Westway, Ernakulam
  50. Ye MJOB
  51. Euroway Study Abroad & Immigration (Ernakulam, Kottayam, Thrissur)
  52. Atheer International
  53. Neo Edvise Overseas Consultancy, Ettumanoor
  54. Astraliv, Ernakulam
  55. IE4U Global Private Limited, Bangalore
  56. Dreamland, Changanassery
  57. Vserv Immigrations, Thammanam, Ernakulam
  58. New Brunswick Capital, Dubai
  59. Canway Migration, Dubai
  60. Edupace Language Academy, Thrissur

Updated on 1November 2025.


⚠️ Important Reminder

All the above agencies have been reported for visa and recruitment fraud activities by multiple individuals.

If you are planning to migrate, study, or work abroad:

  • Always verify the agency’s registration with the Ministry of External Affairs or Protector of Emigrants.
  • Avoid making advance payments before receiving official documentation.
  • Check for authentic reviews and testimonials, not just social media ads.
  • Trust only licensed consultants and government-approved channels.

✳️ Stay Informed, Stay Safe

Fraudulent agencies often use attractive offers to trap people. Protect yourself and others by spreading awareness.
If you know of any more suspicious agencies, report them immediately to the authorities or share verified information online to warn others.

Together, we can build a community that’s informed, alert, and safe from visa fraud.

Monday, January 6, 2020



ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo


சோழவந்தான் படித்துறை சனீஸ்வரபகவான்.

நம்பி வந்தவரை வாழ வைக்கும் சோழவந்தான் சனீஸ்வரர் விசாகம் நட்சத்திரத்தின் அதிதேவதையாகும். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து மேற்கு திசையில் 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் வைகை நதிக்கரையில் மேற்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.

வழிபடும் முறை

விசாகம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வர வேண்டும். காலையில் நீராடி விட்டு விரதம் இருக்க வேண்டும். கோவிலுக்கு வந்தவுடன் அர்ச்சகரை சந்தித்து தனக்கு செய்ய வேண்டிய அர்ச்சனை, பரிகார பூஜைகளுக்கு ஏப்பாடு செய்ய வேண்டும்.

இந்த கோவிலில் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது. சனீஸ்வர பகவானுக்கு எள், கருப்பு துணி, வெள்ளைப்பூ பிச்சிப்பூ முல்லைப்பூ ஆகியவை விசேஷம். தேங்காய், பழம் மற்றும் பூஜைப்பொருட்களை கொடுத்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். அர்ச்சகர் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் உட்கொள்ள வேண்டும். மதியம் கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும். எள் சாதத்தை காகத்துக்கு படைக்க வேண்டும். பரிகாரம் செய்யக்கூடியவர்கள் சன்னதியில் 9 எள் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். மற்றபடி பக்தர்கள் ஒரு விளக்கு ஏற்றி வழிப்பட்டாலே போதும். பின்னர். மாலையில் விரதத்தை முடிக்கும் போது 9 விளக்குகள் ஏற்றி வைத்து பகவானை வணங்கி சன்னதியை சுற்றி வந்து வழிபட வேண்டும்.

மிளகு சீரகம் அதிகம் போட்டு தயாரித்த வெண் பொங்கல் நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட வேண்டும். பின்னர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

சனிக்கிழமைகளில் நெய் அல்லது எள் விளக்கேற்றி, எள் சாதத்தை அன்னதானம் வழங்கினால் சனி கிரக பாதிப்புகள் குறையும். தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

மூன்று மாதம் விசாக நட்சத்திரத்தன்று சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம்செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சுயம்பு சனீஷ்வரரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். சனி தசை, ஏழரைச்சனி, அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் பூஜை செய்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடுவர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை. பால், தயிர், திரவியப்பொடி, நல்லெண்ணெய், வில்வப்பொடி, மஞ்சள்பொடி, தேன், சந்தனம், பன்னீர், இளநீர், அரிசிமாவு ஆகியவற்றால் அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo


மதுரையிலேயே

பஞ்சபூதத் தலங்கள்

உள்ளதை நம்மில் பலபேர்

அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆம் ""

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை ஊதா பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

.அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் மதுரையில் வாழ்ந்தாலும் மதுரையில் இறந்தாலும் மதுரையில் வழிபட்டாலும் மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.




ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo


ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..

#ggiitinfo

 இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.

நீரில்‌ பாசி படிந்து நின்றது போல்‌ நம்‌ மேல்‌ படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின்‌ பாதம்‌ தொழுது ஒரு உபாயம்‌ கூறுகிறேன்‌ என்கிறார்‌ அகத்தியர்‌ பெருமான்‌.

சாபமது நிவர்த்தியாக நீ மகனே சொல்லுகிறேனன்றாய்க் கேளு பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்துபாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே சொல்லிடுவாய் தினம் நூத்தி யிருபத்தெட்டு சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் “.
.
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும்‌ சூரிய பகவானை வணங்கி ஓம்‌ கிலி சிவஎன்ற மந்திரத்தை 128 முறை செபிக்க வேண்டும்‌. இப்படி ஒரு மண்டலம்‌ எனப்படும்‌ 48 நாட்கள்‌ தொடர்ந்து செபித்து வர நம்மை உடும்பு போல்‌ பற்றி நின்ற சனீஸ்வர தோஷம்‌ விலகி விடும்‌. ஓது ஏராளமானோர்‌ செய்து பயனடைந்த முறையாக உள்ளது. இந்த 48 நாட்களும்‌ மது, மாது, மாமிச உணவு, தீய சொற்களை பேசுவது போன்றவற்றை அறவே தவிர்த்து, மந்திர உச்சாடனம்‌ செய்யும்‌ பொது நிச்சயமான பலனை கொடுக்கும்‌. மேலும்‌ 48 நாட்கள்‌ முடிந்த பின்பு ஒருமுறை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்‌ கோயில்‌ அல்லது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்‌ கோயில்‌, குச்சனூர்‌ சனீஸ்வரன்‌ கோயில்‌ போன்றவற்றிற்கு சென்று சனி பகவானை வழிபாடூ செய்வது நன்று.
கீழே உள்ள அட்டவணையின்  படி பைரவருக்கு தீபம் ஏற்றி வந்தால் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ளலாம் ...

Day
Time
Saturday
5.30 pm to 6 pm
Sunday
7.45 am to 8 am
Monday
8.30 pm to 9 pm




ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.
#ggiitinfo

Monday, December 9, 2019


ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..


ஆமா ... அந்த அமுத துளி
யார் மேல விழும் ..??
கிரி வலம் வரும்போது
அமுத புஷ்ப மழைத் துளி
நம் மேல விழுமா ..?!
திருவண்ணாமலையின் புகழ் .
10/12 /2019 -செவ்வாய் அன்று -கார்த்திகை தீபம்.
திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது அது:
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று மழை பொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.அக்கினி மலையிலானது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட பூமாதேவியை குளிர்விக்க - சாந்தப்படுத்த - இப்படிப்பட்ட அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது.
ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமி குளிரும் .விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.
மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.
அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.
இனி கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், முடிந்தவர்கள் மழைக்கு ஒதுங்கவேண்டாம்



ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.

Thursday, December 5, 2019





ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..


மனிதர்களை படைத்த இறைவன், அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தான். அதோடு மனிதர்களாலேயே துன்பங்களையும் தந்தான். பின்னர் மனிதர்களை வென்று நிம்மதியாக வாழ்வதற்கு பலமுறைகளையும், வழிகளையும் காட்டினான்.

இந்த வழிகாட்டுதலில் ஒன்றுதான் பக்தி. இதை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  ஞான பக்தி, ஆசாரிய பக்தி, ஆண்டவனுக்கு அருட்பணி செய்கின்ற பக்தி, கடைசியாக, பிடித்தமான மலர்களால் ஆண்டவனை நினைத்து அர்ச்சனை செய்யும் பக்தி.  இந்த நான்கு வகை பக்திகளும் அவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, நம்பிக்கைக்கு ஏற்ப செய்யப்படுவது.

ஞானபக்தி என்பது மிகப்பெரிய தவத்தினால் பெறப்படுவது.  இது எல்லோராலும் செய்யக்கூடியது அல்ல. அத்தனை வாய்ப்பு ஒரு சிலருக்கே ஏற்படும்.  ஆசாரியபக்தி என்பது ஆண்டவனை வழிபாடு செய்து பெறுவது. இதும் எல்லாவித மனிதர்களால் செய்யக் கூடியது அல்ல.

ஆண்டவனுக்கு நேரடியாக அருட்பணி செய்கிற பக்தி, இது கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, தம் தம் மத வழக்கத்துக்கு ஏற்ப, மனித நேயத்தை போற்றும் வகையில், நான்கு பேர்களுக்கு உதவிடும் வகையில் செய்யக் கூடிய, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய பக்தி.

இவை எல்லாம் தாண்டி நிற்கும் பக்திதான் மலர்களைக் கொண்டு நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு, அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தனை செய்வது.  இது ஒன்றுதான் சகலவிதமான மனிதர்களுக்கும் ஏற்ற பக்தி.  நிம்மதியை தரக் கூடிய பக்தி மாத்திரமல்ல, எந்த வித இடையூறும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை அழைத்து பக்தியினால் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடியது.

இதற்கு மலர்கள் அவசியம். சரி எந்தெந்த மலர்கள் எந்தெந்த கிரகங்களுக்கு, இறைவனுக்கு ஏற்றது என்பதை நமது முன்னோர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தானோ என்று சொல்லவில்லை.  ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான சூட்சுமத்தை வைத்து சொல்லி, இதை பின்னர் அனுபவ ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர், மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஞானிகள் மூலம், ரிஷிகள் மூலம், வேதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

சூரியன்:- உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 8, 12ம் வீட்டில் இருந்தால், "செந்தாமரைப்" பூவால் சூரியனை, ஞாயிறு தோறும் வழிபாட்டு வந்தால் உத்தியோகம், கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் விறுவிறு என்று விலகிவிடும். வேறு எந்த மலரைக் கொண்டும் சூரியனை வழிபடக்கூடாது. அப்படி ஒரு வேளை செந்தாமரைப் பூ கிடைக்கவில்லை என்றால் தாமரை தண்டு இதழால் திரியிட்டு விளக்கேற்றி வருவது கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

சந்திரன்:- ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்த சமயம் அவருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி அல்லது சந்திர அந்தரம் நடந்து கொண்டிருந்தால் அந்த நபர் சந்திரனுக்கு உரிய வெண்மை நிறத்துடைய "அல்லி மலரை" வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் நீர் சம்பத்தப் பட்ட வியாதிகள் வெளிநாடு செல்ல முடியாமல் ஏற்படும் தடங்கல்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வந்து விடலாம். "வெள்ளல்லி" மலர் கிடைக்காவிட்டால் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்று.

செவ்வாய்:- ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12இல் செவ்வாய் இருந்து செவ்வாய் தசையோ அல்லது புக்தி, அந்தரமோ நடை பெற்று - வியாதியினால், போட்டி, பொறாமையினால் முன்னேற முடியாமல் துன்பப்பட்டுக் கிடந்தால், அதிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரே வழி "சண்பக" மலரால் - செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது முருகப் பெருமானையோ வழிபட்டால் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் சட்டென்று விலகி வெளியே வந்து விடலாம்.

புதன்:- ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தேவை அற்ற பாதிப்புகள் எற்ப்படத்தான் செய்யும். கோர்ட் விவகாரம், தோல் சம்பந்தமான வியாதிகள், மாமன் உறவுமுறை பகை, தொழில் நஷ்டம் ஆகியவை வரலாம். இதிலிருந்து விடுதலை பெற "வெண் காந்தள்" மலரை வைத்து புதன் கிழமை தோறும் பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமானது. சிறந்த பரிகாரமும் கூட.

குரு:- ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12இல் குரு பகவான் இருந்து அதே சமயம் அவருக்கு குரு மகாதசை, புத்தி, அந்தரம் நடந்து கொண்டிருந்தால், குரு அனுகூலமாக மற்ற பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்வதை விட, குரு பகவானுக்கு பிரியமான "முல்லை" பூவால், வியாழன் தோரும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால், பயம் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றலாம்.

சுக்கிரன்:- ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், 12ம் வீட்டில் மறைந்திருந்தாலும், பகை வீடான குரு வீட்டில் தனித்திருந்தாலும், சுக்கிர தோஷம் என்று பெயர்.  இந்த சுக்கிர தோஷம் போக வேண்டுமானால் "வெண் தாமரை" புஷ்பத்தினால், சுக்கிரனுக்கு வெள்ளி தோறும் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரன் இரண்டு மடங்கு அனுகூலமாக மாறி சகல விதமான சௌபாக்கியங்களையும், கல்யாண சந்தோஷங்களையும் தருவார்.

சனி:- ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8,12இல் சனி பகவான் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப் படலாம். இதிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமானால் "கருங்குவளை" மலரால் சனீஸ்வரனுக்கு, அல்லது சனி கிரகத்திற்கு சனிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்துவரின் சனி பகவானின் அனுக்ரகத்திற்கு பாத்திரமாகலாம்.

ராகு:-  ஒருவரது ஜாதகத்தில் "ராகு" 2,4,5,7,8,12இல் இருந்தால், அவருக்கு ராகுவால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.  இதனைத் தடுக்க "மந்தாரை" புஷ்பத்தால் முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால், ராகுவினால் எந்தவித தொந்தரவும் கடைசிவரை இருக்காது.

கேது:- ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் 2,4,5,7,8,12இல் தனித்து இருந்தாலும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், கேது தோஷம் உண்டு.  இந்த தோஷத்தை நீக்க மிக சுலபமான வழி "செவ்வல்லி" மலரால் கேது கிரகத்திற்கு முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால் போதும். கேது பகவானது பரிபூரண அனுக்ரகம் கிடைத்து விடும்.

இவை எல்லாம் எளிய, ஆனால் பலன் தரும் பரிகாரங்களாகும். மனிதர்கள், இதை நம்பி செய்து வந்து பலனடைய எமது ஆசிகள்.

அகத்தியர் அடியவர்களே, அகத்தியப் பெருமான் ஆசியுடன் இந்த எளிய பரிகாரங்கள் நம் தெளிவுக்கு வந்துள்ளது. இவற்றை செய்து, எல்லோரும் வாழ்க்கையை சுத்தமாக்கி கொள்ளுங்கள். அருள் பெறுங்கள்.



ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.

Thursday, November 14, 2019






ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..


அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."


ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.

Managed By : GGIITINFO