Thursday, November 7, 2019


ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..


‘ஜீவன்’ என்றால் உயிர் . அப்படி உயிரோட்டமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த ஓலையிலே, வருகின்ற அன்பர்களின் தன்மைக்கு ஏற்ப சித்தர் பெருமக்கள் உயிரோட்டமாக வந்து அந்தத் தருணத்தில்  ஓலை வாசிப்பவர்  கண்களுக்கு எழுத்து வடிவமாகவும், சில சமயம் உள் உணர்வாகவும் அருள்வாக்கை கூறுகிறார்கள்.
இது தொடர்பான  ஓலைக்கு ‘ஜீவ நாடி’ என்று பெயர்.குறிப்பாக இந்த சுவடியிலே சித்தர்கள் கூறுகின்ற அருள்வாக்கின் தன்மைக்கு,சித்தர்களே இட்ட பெயர்தான் ‘ஜீவ  நாடி’ என்பது.

நாடி வகைகளில் “ஜீவநாடி” என்று ஒன்று இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். உயிரோட்டமுள்ள நாடி என்று பொருள். ஏதாவது ஒரு சித்தர்கள் மூலமாக எழுத்துக்கள் தோன்றி பின்பு மறைந்துவிடும். இது சித்தர்கள் மூலமே கிடைக்கும். அதில் குறிப்பாக அகத்தியர், காகபுஜண்டர், ஸ்ரீசுகர் போன்ற ஜீவ நாடிகள் மிகவும் சிறந்த பலனைத் தருகின்றன. அகத்திய ஜீவநாடி என்றால் அகத்திய மகரிஷி தனது அருள்வாக்காக நாடி படிப்பவர் மூலம் அறிவிப்பதாகும்.

அதேபோல் காகபுஜண்டர் தனது சக்தியை நாடி படிப்பவர் உடலில் செலுத்தி தனது எண்ணத்தை ஒலைச்சுவடி மூலம் ஒளி வடிவில், வரி வடிவில் தோன்றி வெளிப்படுத்தி வந்திருப்பவரின் எதிர்காலத்தை உரைப்பார். ஸ்ரீசுகர் மகரிஷியும் அவ்விதமே தனது ஜீவ நாடியில் வெளிப்படுத்துவார். சுகர் மகரிஷி கிளி உருவம் உடையவர். சாதாரண கிளிகளே சீட்டு எடுத்து ஜோதிடம் சொன்னால் சிலருக்கு அப்படியே பலிக்கிறது எனும் போது சாட்சாத் ஸ்ரீசுகர் மகரிஷியே தனது அருள் வாக்கில் உரைத்தால் எப்படி இருக்கும்.

 அகத்தியர் சாதரணமானவர் அல்ல. ஸ்ரீ முருகப் பெருமானிடமே பிரணவ உபதேசம் பெற்றவர். வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தவுடன் அத்துனை பேரையும் விடுத்து ஸ்ரீ அகத்தியரை குறு முனிவரைச் சென்று சமன் செய்யுமாறு சிவபெருமான் கட்டளை இட்டார் எனில் அகத்தியர் பெருமையை என்னவென்று சொல்வது. பிரளயகாலத்தில் கூட காகமாக மாறி கல்லால மரத்தில் அமர்ந்து பிரளயம் நடப்பதைப் பார்த்து என்றுமே அழிவில்லாமல் இருக்கும் 

காகபுஜண்டருக்கு வேறு விளக்கம் தேவையா? இப்படி இந்த மூன்று சித்தர்கள் மட்டுமல்லாது உபாசனை மூலம் பல தெய்வங்களும், தேவதைகளும், இன்னும் பல சித்தர்களும் ஜீவ நாடியில் வந்து பதில் சொல்வார்கள். 

இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால் சத்தியமான உண்மை. ஜீவ நாடி என்பது சித்தர்களது அருள்வாக்கே. அது சுவடி மூலமும் வரும். சுவடி இல்லாமலும் வரும். சுவடி மூலம் வருவது சற்று துல்லியமாக இருக்கும்.

பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ நாடியில் அறிவிப்பது சூட்சுமமாகவும் இலை மறை காயாகவும் இருக்கும். பலமுறை சுருக்கமான பாடல் வடிவில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளும்படி வரும். சில சமயம் வெறும் வரைபடங்கள் மட்டும் தோன்றும். இப்படி ஜீவ நாடியை ஜீவனுள்ள நாடியாகப் போற்றி வந்தால் முக்காலமும் சொல்லும். 

ஒரு சிலர் கர்ண எட்சினி போன்ற தேவதைகளை வசியம் செய்து நாடி படிப்பதாகச் சொல்கிறார்கள். அது மாந்தீரீகம் சம்பந்தப்பட்டது. அதற்கு உடலில் அதிக பலம் தேவை. ஆனால் சித்தர்கள் வழியில் ஜீவ நாடி படிப்பது ஒரு சுகானுபவம். உடலும் உள்ளமும் சித்தர்கள் அருளால் ஆட்கொள்ளப்படும்.. அது இன்பத்தையும், ஒர் இனம் புரியாத சுகத்தையும் கொடுக்கும். தெய்வங்களே படிக்கும் ஜீவ நாடிக்கு ஈடு இணையே இல்லை.


இவ்வாறான ஏழு சித்தர்களின் ஜீவநாடி படிக்கப்படுகிறது ...  

ஸ்ரீ சப்தரிஷி  ஜீவநாடி  ஜோதிடம் ..
M.S.Balasubramanian,
No.35, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு,
மதுரை கல்லூரி பஸ் ஸ்டாப்., மதுரை-11
Contact: 91596 16171, 93658 81937.


Managed By : GGIITINFO


No comments:

Post a Comment